சனி, 22 ஆகஸ்ட், 2015

                                         நீயா நானா குழுவில் சேராதீர்கள் 

அய்யய்யோ! தெரியாத்தனமா நீயா நானா குழுவில் சேர்ந்து இருந்தேன். ஒரு சின்ன போட்டோ யாராவது அனுப்பினால் போதும். உடனே நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் எழுத வேலை வெட்டி இல்லாதவங்க இருக்காங்க. என்னுடைய மெயில் பாக்ஸ் நிறைந்து வழிகிற அளவுக்கு இன்னும் கமெண்ட்ஸ் கொட்டிக்கொண்டே இருக்கிறது. தடுக்க வழி தெரியவில்லை. அந்த குழுவை விட்டு வெளியே  வந்து விட்டேன். ஆனாலும் கமெண்ட்ஸ் வருவது நிற்கவில்லை கடவுளே!

நாட்டில் இவ்வளவு பேர் வேலை  வெட்டி இல்லாம இருக்காங்களா? கோபிநாத் ஐயா இதைத்தான் நீங்கள் விரும்புறீங்களா?

சனி, 15 ஆகஸ்ட், 2015

                                                       தலைக்கவசம் அணிதல் 

சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி அவர்கள் மக்களின் உயிர் மீது மிக்க பாசம் வைத்து தலைக்கவசம் அணிந்து சென்றால் சாகாமல் வாழ்வார்கள் என்பதற்காக ஒரு அருமையான தீர்ப்பு சொல்லி இருக்கிறார். தலைக்கவசம் அணிந்து செல்ல வில்லை என்றால் வாகனத்தை கைப்பற்றுங்கள். தலைக்கவசம் வாங்கி வந்து ரசீதுடன் காட்டி அபராதமும் கட்டினால் தான் வண்டியை திருப்பித்தர வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
ரொம்ப அருமையான தீர்ப்புத்தான். மக்கின் உயிர் மீது அவருக்குள்ள அக்கறையை நினைத்து உடல் புல்லரிக்கிறது.

பள்ளிக்கு செல்கின்ற மாணவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் கிடையாது. ஆனால் ரொம்ப சொகுசாக இன்று கூட ஒரு பள்ளி மாணவர்கள் மூவராகசென்ற காட்சியைக் காண நேர்ந்தது. அதிலும் அதிவேகம். அதை யார் தடுப்பது? அவர்கள் உயிரும் அவர்களால் விபத்தை சந்திக்கும் நபர்களின் உயிரும் முக்கியமில்லையா? அவ்வாறு உரிமம் இன்றி ஓட்டும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் மீது என் நவடிக்கை இல்லை?

டாஸ்மாக் கடைக்கு சென்று நன்றாக ஊற்றிக்கொண்டு குடி போதையில் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச்செல்கிரவர்கள் மீது என் நடவடிக்கை இல்லை? தலைக்கவசம் அணியாவிட்டால் ஓட்டுபவர் தன் உயிரைத்தான் பணயம் வைக்கிறார். ஆனால் மேலே சொன்னவர்கள் அடுத்தவர்கள் உயிருக்கு உலை வைக்கிறார்களே அது தெரியவில்லையா?

நீதிமன்ற உத்தரவு கண்மூடித்தனமாக போடப்பட்டதா கத் தான் தோன்றுகிறது.